ரேணுகாசாமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை உடனே ரத்து செய்ய உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கன்னடத்தில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர் நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் விமர்சித்த அவரது சொந்த ரசிகரான ரேணுகாசாமி என்பவரை தனது பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்று அடித்துக் கொன்று புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் மட்டுமல்லாமல் நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக தர்ஷன், பவித்ரா உள்பட 17 பேருக்குமே ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையுமே ஜாமீனில் விட்டதை செல்லாது என அறிவித்துள்ளது. நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், உடனே தர்ஷனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
Edit by Prasanth.K