சென்னை வடபழனியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தையும், ஏற்கனவே உள்ள பழைய மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.8.12 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிதாக அமையவுள்ள மெட்ரோ நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய நிலையத்தையும், பழைய நிலையத்தையும் இணைக்கும் இந்த ஆகாய நடை மேம்பாலம், பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், பயணிகள் ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சிரமமின்றி எளிதாக மாற முடியும். இரண்டு நிலையங்களுக்கும் இடையில் நடந்து செல்வதற்கு ஆகும் நேரமும் குறையும்.