ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு, ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 5 அன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மும்பையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், சுமார் 50 நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டனர்.
அதேபோல் செபி நடத்திய தனி விசாரணையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (R Infra) நிறுவனம், க்ளீ பிரைவேட் லிமிடெட் (CLE Pvt Ltd) என்ற நிறுவனம் மூலம் சுமார் ரூ.10,000 கோடியைத் திசை திருப்பியுள்ளது