நடிப்பு ஆசை காட்டி சிறுமி வன்கொடுமை! புல்லுக்கட்டு முத்தம்மா பட நடிகை கைது!

Prasanth K

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (11:51 IST)

நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கேரள நடிகையை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா, பால்காரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மினு முனிர். இவர் மலையாளத்திலும் பல முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரிடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசைக் காட்டியுள்ளார்.

 

பின்னர் சிறுமியை அவர் கேரளா அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியை பலரிடம் அனுப்பி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

 

அதன்படி நடவடிக்கை எடுத்த சென்னை போலீஸார் கேரளா சென்று ‘புல்லுக்கட்டு முத்தம்மா’ பட நடிகை மினு முனிரை கைது செய்துள்ளனர். அவர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்