டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

Siva
புதன், 5 பிப்ரவரி 2025 (09:23 IST)
டெல்லியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல விஐபிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரின் பெயர் கௌரவ் மற்றும் அஜித் என தெரிய வந்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி அவர்கள் கொண்டு சென்றதாகவும், அந்த பணம் எங்கிருந்து வந்தது, எங்கு எடுத்து செல்கின்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முதல்வரின் உதவியாளர் என்றும், இன்னொருவர் டிரைவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்