டெல்லியில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அதன் பிறகு, அவருக்கு கவர்னர் உள்பட பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால்தான் அவர் நம் நாட்டை அடமானம் வைக்க தயாராகிவிட்டார் எனவும், மத்திய அரசிடம் இருந்து கவர்னர் பதவி அல்லது குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. "டெல்லி தேர்தலை மையமாக வைத்து மூன்று பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது தனிநபர் ஆணையமாக செயல்படும் நிறுவனத்தை திசைமாற்ற முயலும் செயல். எனினும், நாங்கள் அரசமைப்பு வரம்புக்கு உட்பட்டு செயலாற்றி வருகிறோம்," என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.