18 வயது தொடங்கும் இளைஞர்களுக்கு வீடு தேடி பரிசளிக்கும் தேர்தல் ஆணையம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:07 IST)
17 வயது முடிந்து 18 வயது தொடங்கும் இளைஞர்களுக்கு வீடுதேடி பரிசளிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது 
 
தற்போது 17 வயது உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரலாம் என்றும் அப்போது தான் அவர்கள் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது 
 
இதனை அடுத்து 17 வயதுள்ள இளைஞர்கள் தற்போது வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டையை ஆன்லைன் மூலமாக அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்தால் 18வது பிறந்த தினத்தில் பிறந்த நாள் பரிசாக அவர்களுடைய வீட்டுக்கே வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்
 
அவரது இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்