இல்லாத அட்ரஸில் கட்சிகள்; 111 கட்சிகள் அங்கீகாரம் ரத்து! – தேர்தல் ஆணையம் அதிரடி!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (19:05 IST)
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகளில் சரியான ஆவணங்கள் அளிக்காத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக சட்டத்தின்படி எவர் ஒருவரும் அரசியல் கட்சி தொடங்கவும் பதிவு செய்யவும் இயலும் பட்சத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான கட்சிகள் தங்கள் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளன. இதில் பல மாநில, தேசிய கட்சிகளை தவிர்த்து பல கட்சிகள் லெட்டர் பேட் கட்சிகள் என்னும் சிறிய அளவிலான அரசியல் கட்சிகள்.

சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தன்னிடம் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் ஆவணங்களை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது பல சிறிய கட்சிகள் தாங்கள் அளித்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்துள்ளது, தவறான முகவரி சான்று, ஆவணங்கள் அளித்ததன் பேரில் நடவடிக்கையாக இந்திய தேர்தல் ஆணையம் 111 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்