6 ஆம் கட்ட தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (15:31 IST)
இன்று நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 12 மணி வரை 25 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று ஆறாவது கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. டெல்லி (7 தொகுதிகள்), மேற்குவங்காளம்(8 தொகுதிகள்), உத்தரபிரதேசம்(14 தொகுதிகள்), மத்தியபிரதேசம்(8 தொகுதிகள்), ஜார்கண்ட்(4 தொகுதிகள்), ஹரியானா(10 தொகுதிகள்),  பீகார்(8 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட 59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதியம் 12 மணி நிலவரம் வரையில் 25 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிகாரில் 20.70 விழுக்காடும், ஹரியானாவில் 23.25 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 28.12 விழுக்காடும், உத்தரப் பிரதேசத்தில் 21.75 விழுக்காடும், மேற்கு வங்கத்தில் 28.08 விழுக்காடும், ஜார்கண்டில் 31.27 விழுக்காடும், டெல்லியில் 19.51 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற 5 கட்ட வாக்குப்பதிவுகளை விட இந்த வாக்குப்பதிவில் குறைவான வாக்குகளே பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்