டெல்லியில் வாக்களித்த ராகுல் காந்தி – 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு அப்டேட்
ஞாயிறு, 12 மே 2019 (11:28 IST)
இன்று நடைபெற்று வரும் ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் வாக்களித்தார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று ஆறாவது கட்ட தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல மாநிலங்களுக்கு உட்பட்ட 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் டெல்லிக்கு உட்பட்ட 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இதில் காலை முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அவுரங்கசீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அடுத்தக் கட்ட வாக்குப்பதிவு வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.