அந்தமான், நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (15:54 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அந்தமான் தீவுகளில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மதியம் 12.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேத விவரம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்