ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:51 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா என்ற பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது 
 
இந்த நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் என்றும், ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சிறிது நேரம் கழித்து இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் அச்சத்துடனே சென்றுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்