ஒரு மாதம் மின் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயா? அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:51 IST)
ஒரு மாதம் மின் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயா?
கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்கள் வீடுகளுக்கு மின் கட்டணம் அதிகம் வருவதாக புகார் அளித்து வருவது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிரபல நடிகை திவ்யா தத்தா தனது வீட்டிற்கு இந்த மாதத்திற்கு உரிய மின் கட்டணம் 50 ஆயிரம் ரூபாய் வந்திருப்பதாகவும் இது குறித்து மீண்டும் மின் கட்டணத்தை சரி பாருங்கள் என்றும் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் 
 
இந்த டுவிட்டுக்கு அவரது ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மின்சாரம் நிறுவனம் மீண்டும் திவ்யாவின் வீட்டிற்குச் சென்று மின்சார ரீடிங் இருக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது 
 
ஏற்கனவே பிரசன்னா, டாப்ஸி உள்பட பல நடிகர், நடிகைகள் தங்களுடைய வீடுகளுக்கும் மின்சார கட்டணம் அதிகம் வந்துள்ளதாக தங்களது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்