கொரோனா வைரஸ் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனுவில் ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் மின்கட்டணம் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
ஆனால் இந்த வழக்கில் விளக்கம் அளித்த தமிழக அரசு விளக்கம் அளித்தபோது, ‘அதிக மின் கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கவில்லை என்றும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயித்ததாக அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று கொள்வதாகவும், இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.