கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிபிகஞ்ச் என்ற பகுதியில் பனிரெண்டு வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த சிறுவனை சூழ்ந்த தெருநாய்கள் கடித்து குதறின. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநிலம் வாரங்கல் காசிபேட் பகுதியில் உள்ள ரெயில்வே காலனி அருகேயுள்ள ஒரு பூங்காவில் தெரு நாய்கள் கூட்டம் 7 வயது சிறுவனை கடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
இந்தியாவில் இப்படி அடிக்கடி தெரு நாய்கள் கடித்து குழந்தைகள், சிறுவர்கள், மக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனைக் காணாமல் அவரது குடும்பத்தினர் அப்பகுதியைச் சுற்றிலும் தேடினர். அப்போது, வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இருந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நாய் சிறுவனின் தொடைப் பகுதியை கடித்துக் குதறிய நிலையில், வாய் பேச முடியாததால், சிறுவன் சத்தம் எழுப்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.