திருப்பதி இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில்...

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (12:01 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிப்பு. 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 
 
இந்நிலையில் திருப்பதியில் சமீபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. 
 
ஆனால் நேரடியாக டோக்கன் வாங்க மக்கள் குவிந்ததால் தரிசன் டிக்கெட் விரைவில் விற்பனை ஆகி சீனிவாசம் வளாகத்தில் உள்ள டோக்ன் கவுன்டர் மூடப்பட்டது. இதனால் இலவச தரிசன டோக்கனை நேரில் வாங்க வந்து ஏமாற்றம் அடைந்த சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் ராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து தரிசன திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்