இந்நிலையில் திருப்பதியில் சமீபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக 20,000 மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தை போல உண்டியலில் போடப்பட்ட காணிக்கையின் தொகையும் அதிகரித்துள்ளது. ஆம், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடியே 77 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.