திருப்பதியில் குவியும் கூட்டம் - ஒரே மணி நேரத்தில் காலியாகும் டோக்கன்கள்!

புதன், 22 செப்டம்பர் 2021 (10:01 IST)
நாளை தரிசனத்திற்கு டோக்கன்களை வாங்க நேற்று 20,000 மேற்பட்ட பக்தர்கள் குவித்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் திருப்பதியில் சமீபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. 
 
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக 20,000 மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர். மேலும் நாளை தரிசனத்திற்கு டோக்கன்களை வாங்க நேற்று 20,000 மேற்பட்ட பக்தர்கள் குவித்தனர். இதனால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய கவுண்டரை இரவு 10 மணிக்கு திறந்து டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. கவுண்ட்டர்கள் திறக்கப்பட ஒரே மணி நேரத்தில் டோக்கன்கள் தீர்ந்துவிட்டன என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்