பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 6 வருடங்களில் என்ன பயன்?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:46 IST)
பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இதனை அடுத்து அன்றைய நிலையில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியதால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் குவிந்தது
 
கருப்பு பணம் ஒழிந்ததோ இல்லையோ பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 வருடங்களாகியும் கருப்பு பணத்தின் மதிப்பு குறையவில்லை என்று தான் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்
 
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை ஓரளவு அதிகரித்தாலும் இன்னும் அதிகமாக ரொக்க பரிவர்த்தனை இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதன் நோக்கத்தை பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்