பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

Mahendran

புதன், 30 ஜூலை 2025 (12:40 IST)
டெல்லியில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிலுவையில் உள்ள பில்களை சரி செய்ய லஞ்சம் கேட்டபோது, மத்திய புலனாய்வுப் பிரிவால் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். அவருடைய வீட்டை சோதனை செய்தபோது ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
நிலுவையில் உள்ள பில்களை விரைவாக சரி செய்ய, மொத்த பில் தொகையில் 3 சதவீதம் கமிஷனாக தனக்கு வேண்டும் என்று பொறியாளர் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு, லஞ்சத் தொகை ₹30,000 என முடிவு செய்யப்பட்டது.
 
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிபிஐ அந்த அதிகாரிக்கு, பொறி வைத்தது. புகார்தாரரிடம் இருந்து லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
 
அதன்பின் பொறியாளருக்கு சொந்தமான டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1.60 கோடி ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள், அதிகமான இருப்பு கொண்ட வங்கிக் கணக்குகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன," என்று சிபிஐ X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், விசாரணை முன்னேறும்போது மேலும் விவரங்கள் வெளியாகும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்