ராஜீவ்வின் பாரத ரத்னா திரும்பப் பெறப்படுமா ?– டெல்லி அரசியலில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (20:43 IST)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டுமென டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் நாடெங்கும் சீக்கிய மதத்தினருக்கு எதிராகக் கலவரங்கள் நடந்தன. தலைநகர், டெல்லியில் கிட்டத்தட்ட 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உணமையான் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கலவரத்தைத் தூண்டியதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதும் குற்றச்சாட்டு வைக்கபட்டது. அதனால் இந்த முக்கியத் தீர்ப்புக் காரணமாக ராஜீவ் காந்திக்கு அவரது இறப்பிற்குப் பிறகு கொடுக்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவைத் திரும்பப் பெற வேண்டுமென திலக் நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜர்னைல் சிங் டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.இதற்காக குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு அந்த தீர்மானமும் நிறைவெற்றப்பட்டது.

இதனால் டெல்லி அரசியலில் சலசலப்புகள் உருவாகியுள்ளன. இந்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகியுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்