மும்பையின் பீச் சாலையில் , நேற்று இரவு பிரஷ்னுகர் பட்டிவாலா என்பவர் ஓட்டிச்சென்ற கார், அதிவேகத்தின் காரணமாக தடுப்புகளை உடைத்துக்கொண்டு அரபிக் கடலில் கவிழ்ந்தது.
விசாரணையில், கார் ஓட்டுநர் பட்டிவாலா மது அருந்தி இருந்தது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அதிவேகம் மற்றும் குடிபோதையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.