தவெக நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

Siva

திங்கள், 13 அக்டோபர் 2025 (08:25 IST)
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில், தி.மு.க. மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு இடையேயான மோதலால் பரபரப்பு நிலவியது.
 
சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நீதிபதியை பற்றி அவதூறு பரப்பியதாக, தி.மு.க. நிர்வாகி அளித்த புகாரின் பேரில், த.வெ.க.வின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
இதனை கண்டித்து, நிர்மல் குமாரை விடுவிக்க கோரியும், தங்கள் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகி குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டி தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய கோரியும் த.வெ.க. நிர்வாகிகள் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
திண்டுக்கல் டி.எஸ்.பி. சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் மற்றும் வாக்குவாதம் தீவிரமடைந்தது. நிலைமையை கட்டுப்படுத்த, காவல்துறையினர் தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகிகளை பலவந்தமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.
 
ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிர்மல் குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் நீதிபதியின் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் சாணார்பட்டி பகுதியில்  பதற்றத்தை ஏற்படுத்தியது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்