கோவை ஜிடி நாயுடு புதிய பாலம் அருகே விபத்து.. 3 பேர் பரிதாப பலி..!

Siva

திங்கள், 13 அக்டோபர் 2025 (08:30 IST)
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர்.
 
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சோகம் நிகழ்ந்தது.
 
கோல்டுவின்ஸ் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று, மேம்பாலத்தில் இருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
 
இந்த கோர விபத்தில், காரில் இருந்த ஈரோட்டை சேர்ந்த சேக் உசேன் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண், ஒரு இளைஞர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
 
கார் பலத்த சேதமடைந்த நிலையில், காவல்துறையினர் நீண்ட முயற்சிக்கு பின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான மற்ற இருவர் குறித்த விவரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
புதிய மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்