கோவில் பிரசாதத்தில் விஷம்; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (08:28 IST)
கர்நாடக மாநிலத்தில் கோவிலில் வழங்கிய பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
 


கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சபரிமலை, மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் அங்கிருந்த கோவில் ஒன்றில் வழிபாடு செய்தனர். அப்போது அந்த கோவிலில் பூஜை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை நூற்றுக்கணக்கானோர் வாங்கி சாப்பிட்டனர்.
 
பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்கள் பக்தர்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டதால் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சிகிச்சை பலனின்றி நேற்று 7 பேர் பலியானதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரசாதம் தயாரித்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவில் சம்மந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த  இருவர், இந்த நாச வேலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த கர்நாடக மாநில முதலமைச்சர், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இச்சம்பவம் கர்நாடகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்