கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

Mahendran

சனி, 25 மே 2024 (08:35 IST)
தமிழகம் போலவே கேரளாவிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கேரளாவில் பருவமழை தொடங்க இருப்பதால் அங்கு மழைக்கான எச்சரிக்கை அவ்வப்போது விடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  
 
இந்த நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மேலும்  கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் என்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி மறு அறிவிப்பு வருமாறு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஏற்கனவே கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஏழு மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகம் மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதை அடுத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்