வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

Siva

ஞாயிறு, 26 மே 2024 (08:37 IST)
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடைந்ததை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வடக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ரீமால் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் புயல் வங்கதேசம், சாகர்தீவு மற்றும் கேபுபாரா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே ரீமால் புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எனவே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ரீமால் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கொல்கத்தாவில் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவஸ்தையில் உள்ளனர்.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்