ஐதராபாத்தில் சாலையில் சென்ற ஆட்டோவை கார் ஒன்று பயங்கரமாக மோதிய வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வணிக பகுதியான சைபராபாத்தில் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக அளவுக்கு மீறிய அதிவேகத்தில் வந்த ஆடி கார் ஒன்று ஆட்டோவின் பின்பகுதியின் பக்கவாட்டில் வேகமாக மோதியது.
அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மழை தண்ணீரால் சாலையில் சுழன்ற படியே பல மீட்டர் தூரங்கள் சென்று சாய்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த அப்பகுதியை சேர்ந்த தனியார் மதுபான விடுதியில் பணிபுரிந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சைபராபாத் காவல் நிலையம் விபத்து ஏற்படுத்தியவரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.