விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துக்கள் வங்கிகள் பெயருக்கு மாற்றம்! – அமலாக்கத்துறை உத்தரவு!

புதன், 23 ஜூன் 2021 (13:40 IST)
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் சம்பந்தபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகள் பெயரில் மாற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள் நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்சி உள்ளிட்டோர் பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சொந்தமான ரூ.9,371 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சொத்துகளை பொதுத்துறை வங்கிகளின் கணக்கில் மாற்றுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் வாங்கிய மொத்தக் கடனில் இது 40% ஆகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்