இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையனாவை ஸொமாட்டோ மற்றும் ஊபர் ஈட்ஸ். சில நாட்கள் முன்பு ஸொமாட்டோவில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்தபோது அதை டெலிவரி செய்ய ஒரு இந்து அல்லாதவர் சென்றிருக்கிறார். அதை வைத்து பிரச்சினை செய்த அந்த வாடிக்கையாளருக்கு “உணவுக்கு மதம் ஏதும் இல்லை” என்று அதிரடியான பதிலை தந்தது ஸொமாட்டோ.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஸொமாட்டோவின் அந்த பதிலை சுட்டிக்காட்டி “நாங்கள் உங்களோடு இருப்போம்” என்று ட்விட்டி உள்ளது ஊபர் ஈட்ஸ் நிறுவனம். இதனால் கடுப்பான பலர் இரண்டு நிறுவனங்களின் அப்ளிகேசன்களையும் போனில் இருந்து அன் இன்ஸ்டால் செய்து அதை ட்விட்டரில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.