பாலுக்கு இல்லாத டிமாண்ட் கோமியத்திற்கு... அப்படி என்ன விஷயம்?

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (17:14 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டு பாலை விட கோமியத்திற்கு டிமாண்ட் அதிகமாக உள்ளதாம். இதனால், மாடு வளப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ள மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
குறிப்பாக உயர்ரக பசுக்களின் சிறுநீர் லிட்டர் குறைந்தபட்சம் ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. ஆனால், பால் ஒரு லிட்டருக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை மட்டுமே கிடைக்கிறது. 
 
இது குறித்து மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் ஒருவர் கூறியது பின்வருமாறு, பால் விற்பனையை காட்டிலும், கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதலாக 30 சதவீதம் லாபம் கிடைக்கிறது.
 
இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக பசுவின் கோமியம் சிறந்த மாற்று மருந்தாக இருப்பதால், இதை விவசாயிகள் விரும்புகிறார்கள். 
 
அதோடு, மருத்துப் பயன்பாட்டுக்கும், வீட்டில் பூஜைகள் செய்வதற்கும் மக்கள் கோமியத்தை அதிகமாக வாங்கி செல்கிறார்கள். இதனால், இரவெல்லாம் தூங்காமல் கோமியத்தை பிடிக்க கண்விழிக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்