உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களுடன் செல்பி எடுத்த உயர்திரு மேதை - உனக்கும் அப்படி ஒரு நாள் வரும் டா..

வியாழன், 12 ஜூலை 2018 (13:21 IST)
ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபர்களை காபாற்றாமல் செல்பி எடுத்துக்கொண்டிருந்த வாலிபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு நோய் செல்பி. எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் உடனே மொபைலை எடுத்து செல்பி எடுப்பது இப்போது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.
 
இந்நிலையில் ராஜஸ்தானில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 3 பேர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றாமல் கிட்டதட்ட அரைமணிநேரம் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சற்று நேரத்திற்கு முன்பாக அடிப்பட்டவர்களை கூப்பிட்டு வந்திருந்தால் அவர்களை காப்பாற்றி இருக்க முடியும் என தெரிவித்தனர்.
 
அப்பாடா இதைக் கேட்கும் போதே நமக்கு கதி கலங்குகிறது. அந்த மேதைகளை கண்டபடி அடித்து துவைக்க வேண்டும் என கோபம் வருகிறது. இந்த செல்பியை பதிவிட்ட நபர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்