ஒரே பசுவுக்கு உரிமை கோரிய இருவர்: நீதிமன்றத்தில் ஆஜரான பசுவும் கன்றும்!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (08:17 IST)
ஒரே பசுமாட்டை இருவர் தங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கோரியதால் இந்த பஞ்சாயத்து நீதிமன்றம் வரை வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாண்டோர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு விநோதமான புகார் வந்தது. இந்த புகாரில் கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் என்பவரும் ஆசிரியர் சியாம் சிங் என்பவரும் ஒரு பசுமாட்டை இருவரும் தங்களுடையது என்று சொந்தம் காண்டாடினர். உள்ளூர் பஞ்சாயத்தினால் தீர்க்க முடியாத இந்த பிரச்சனை பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றது. 
 
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் மற்றும் ஆசிரியர் சியாம் சிங் ஆகிய இருவரும் ஆஜராகினர். அதுமட்டுமின்று சர்ச்சைக்குரிய பசுவும் அதன் கன்றும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது. பசுவும் கன்றும் நீதிமன்றத்தில் ஆஜரானதை நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்