ஆடுகளுக்கு கொரோனாவா? 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (19:54 IST)
50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவாது என்று கூறப்பட்டாலும் ஒரு சில நாடுகளில் சிங்கம் புலி ஆகிய விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையும் இதனை அடுத்து அவர் வளர்ந்து வரும் ஆடுகளுக்கு சுவாச பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டாகவும் இதனால் அவருடைய 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டும்தான் பரவும், விலங்குகளுக்கு பரவாது என்று கூறப்பட்ட நிலையில் திடீரென 50 ஆடுகளுக்கு தொற்று அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மனிதர்களே மீண்டு வர முடியாத நிலையில் விலங்குகளுக்கும் பரவினால் அதன் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஆடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் மட்டன் விற்பனை படு வீழ்ச்சி அடையும் என்றும் அஞ்சப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்