வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஏற்கனவே சென்னை, காஞ்சுபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி, ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுள்ளதாவது:
இறைச்சிக் கடைகள் திங்ட்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே செயல்பட வேண்டும், துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனிக் கிழமை ஆகிய 4 நாட்கள் தான் செயல்படும் , மருந்துகடைகள், பெட்ரோல் பங்குகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாநாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.