உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் கொரோனா முழுவதுமாக அழியாது என நுண்ணுயிரியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வேரியண்டுகளில் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் புதிய வேரியண்டுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது ஒமிக்ரான் வேரியண்ட் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள நுண்ணுயிரியியல் நிபுணர் ககன்தீப் காங், கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்-2 அதன் திரிபுகளுடன் மனிதர்களிடையே வாழும் நிலை நீடிக்கும் என்றும், மற்ற கொரோனா திரிபுகளை விட ஒமிக்ரான் வீரியம் குறைவானது என்றும் தெரிவித்துள்ளார்.