தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு ஒமிக்ரான்: மொத்த பாதிப்பு எவ்வளவு?

சனி, 1 ஜனவரி 2022 (07:49 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தால் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மொத்தம் 74 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் 46 பேருக்கும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று 74 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து மொத்தம் 120 பேர் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழக அரசும் இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்