8 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (10:14 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  8,318 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,63,749  ஆக உயர்ந்தது. புதிதாக 465 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,967 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,88,797 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,07,019 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,21,06,58,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 73,58,017 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்