நியுசிலாந்து தொடக்க ஜோடியைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் போராட்டம்!

சனி, 27 நவம்பர் 2021 (10:08 IST)
நியுசிலாந்து அணி மூன்றாம் நாளிலும் விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அறிமுகப்போட்டி சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இறங்கிய நியுசிலாந்து அணியும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகின்றனர். நியுசிலாந்து அணியின் வில் யங் 89 ரன்களோடு சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்