மேலும் 2 தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:03 IST)
3 கொரோனா தடுப்பூசிகளை அவரச தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தகவல்.

 
ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு அவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் புதிதாக இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் - இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பிவேக்ஸ், நானோ துகள் தடுப்பூசியான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மால்நுபிரவிர் என்ற மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மால்நுபிரவிர் மாத்திரை பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
3 கொரோனா தடுப்பூசிகளை அவரச தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்