வெங்காய விலையை குறைக்க முடியாது: உணவு துறை மந்திரி தகவல்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (16:53 IST)
வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது தங்களின் கைகளில் இல்லை என்று மத்திய உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

டெல்லியில் நேற்று  உயர் அதிகாரிகளோடு ஆலோசனை  நடத்திய பின், உணவுத் துறை மந்திரி ராம்விலாஸ் நிரூபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் 2016-2017 ல் 2.65 லட்ச ஹெக்டேர் பரப்பளவு பயிரிடப்பட்ட வெங்காயம் 2017-2018 ல் 1.90 லட்ச ஹெக்டேர் பரப்பளவு மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
பருவ நிலை மாற்றம் காரணமாகவும், தொடர் மழையின் காரணமாகவே காய் கறிகளின் உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளதாக விளக்கம் தெரிவித்தார். கரீப் பருவ வெங்காய அறுவடை நடந்த பின்னரே வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்