ஏர்டெல்லின் சிறப்பு சேவை: தமிழகத்தில் மட்டும்!!

வெள்ளி, 24 நவம்பர் 2017 (15:31 IST)
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தமிழகத்தில் 13,000 புதிய பிராட்பேண்ட் மையங்களை கொண்டுவர முடிவுசெய்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் இண்டர்நெட் சேவையை கொண்டு செல்ல புராஜெக்ட் லீப் என்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்து, அதனை தற்போது நடைமுறைபடுத்தி வருகிறது. 
 
அதன்படி தமிழகம் முழுவதும் 13,000 புதிய பிராட்பேண்ட் மையங்களை அமைத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் 95 சதவீத மக்களுக்கு இண்டர்நெட் சேவையை அளிக்கமுடியுமாம்.
 
ஏர்டெல் நிறுவனத்துக்கு மொத்தம் 33,000 பிராட்பேண்ட் மையங்கள் உள்ளன. தற்போது மேலும், 13,000 பிராட்பேண்ட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
புதிய பிராட்பேண்ட் மையங்கள் அமைக்கப் பட்டுள்ளதால் இணைய சேவையின் வேகம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் டிஜிட்டல் தொலைநோக்கு பார்வைக்கு முழு அளவில் ஏர்டெல் ஈடுபட்டு வருகிறதாம். 
 
மேலும், இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட 4ஜி மற்றும் 3ஜி சேவையை  வழங்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்