அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று சோனியா காந்தி ஆஜர்: காங்கிரஸார் போராட்டம்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (07:41 IST)
அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக உள்ளதை அடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவுசெய்தது
 
இதனை அடுத்து சமீபத்தில் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகிய நிலையில் அவரிடம் விசாரணை முடிந்தது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதால் அவரிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது 
 
இதனையடுத்து இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்