மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாறுகிறது: ‘Bangla’ என மாறலாம் என தகவல்!
புதன், 20 ஜூலை 2022 (09:47 IST)
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்றுமுன் உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்திருப்பதாக தெரிவித்தார்
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்காலி இந்தி ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் Bangla என அழைக்கும் விதமாக மாற்றக்கோரி மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வந்திருப்பதாக உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலம் விரைவில் Bangla என மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.