பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது அமலாக்கத்துறை!

வியாழன், 14 ஜூலை 2022 (16:29 IST)
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கடந்த மார்ச் மாதம் சிபிஐ போலீசார் கைது செய்து. இந்நிலையில் அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் பங்குசந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலோகெஷன் என்ற வசதி 2010ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி சில சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை செய்துவருகிறது.
 
இந்த நிலையில் அமலாக்கத் துறையும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்