கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முதலமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இவர்களில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து வருகின்றனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் எம்பி ராஜிவ் சாதவ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி ராஜிவ் சாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை மருத்துவர்கள் உறுதி செய்தனர்
மறைந்த காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதம் அவர்களுக்கு வயது 46 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி ராஜிவ் சாதவ் மறைவுக்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்