கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதல் சிகிச்சையாக ரெம்டெவிசிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருவதால் நோயாளிகளின் உறவினர்கள் ரெம்டெவிசிர் மருந்துக்காக அலைகின்றனர். குறிப்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெவிசிர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அவர்கள் தற்போதைய சூழலில் ரெம்டெவிசிர் மருந்தால் எந்தவித பயனும் இல்லை என்றும், இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர குணப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்