சோனியா காந்தி தலைமையில் காங்., முக்கிய ஆலோசனை

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:36 IST)
மத்திய அரசின் ஜி20   அழைப்பிதழில், ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையான நிலையில்,  மத்திய பாஜக அரசு இந்தியா என்ற பெயரை ‘பாரதம்’ என்று மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு  எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோனியா காந்தி தலைமையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில்  காங்கிரஸ் கட்சி எம்பிக்கள்  முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி  நாடாளுமன்றக் சிறப்புக் கூட்டத்தொடரில், எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியாவை பாரதம் என்று பெயர்  மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகும்  நிலையில் இதுபற்றியும் எதிர்ப்பு தெரிவிப்பர் என்று தெரிகிறது.வல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையை காரணமாக

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்