குஜராத்தில் மனைவிக்காக அரசு நிலத்தை விற்ற மாவட்ட கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலத்தில் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா என்பவர் அண்மையில் அரசு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார். அந்த தனியார் நிறுவனத்தில் பிரதீப் சர்மாவின் மனைவி ஒரு பங்குதாரராக இருந்துள்ளார்.
நிலத்தை விற்றதன் மூலம் ரூ:1 கோடியே 20 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவிக்கு ரூ:29 வட்சம் தனிப்பட்ட முறையில் லாபம் கிடைத்துள்ளது.
இந்த ஊழல் வெளியே தெரிந்துவிட, பிரதீப் சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.