தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ’சிதம்பர ரகசியம் விரைவில் அம்பலம்’ என்று பதிவிட்டு ஒரு பிரபல செய்தி சேனலில் செய்தியையும் அவர் இணைத்திருந்தார். அவர் இந்த டுவீட் பதிவிட்டது பா. சிதம்பரத்தைக் குறித்துத்தான் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான முறைகேடு வழக்கில் , இந்திராணி அப்ரூவராக மாற சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டுமென்று கோரி இந்திராணி முகர்ஜி தாக்கல் செய்த மனுவில், தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், இந்த வழக்கத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்திராணியின் வாக்குமூலத்தை சீல் வைத்த உறையில் மூடி தாக்கல் செய்யுமாறு அனுமதியளித்ததுள்ளது. தற்போது இவ்வழக்கில் ,முக்கிய நபராக இருக்கும் போது, இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைசர் ப. சிதம்பரம், அவர் மகன் கார்திக் சிதம்பரம் ஆகியோருக்கு கடுமையான சிக்கலை உருவாக்கிடும் என்ற தகவல்கள் வெளியாகிறது.
இந்திராணி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜியாவுடன் மும்பையிலுள்ள பைகுலா சிறையில் ஒரு கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ப. சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம் ஆகிடோர் மீது அந்நிய முதலீடு விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் இன்று தமி்ழக பாஜக தலைவர் தமிழிசை ப. சிதம்பரத்தை குறிக்கும் வகையில் விரைவில் ’சிதம்பர ரகசியம் விரைவில் அம்பலமாகும் என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.